ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளி (த்ரிஸதி நாமாவளியுடன்). தமிழில் – பெரிய எழுத்துக்களில் (உச்சரிப்புத் துணையுடன்).
“விக்தநாஸிநீ” (இடையூறுகளை நீக்குபவள்), “ஸர்வ வ்யாதி ப்ரஸமநீ” (ஸகல வ்யாதிகளையும் போக்குபவள்), “தநதாந்யவிவர்திநீ” (தநத்தையும் தாந்யத்தையும் வருத்தி செய்பவள்) என்றெல்லாம் இந்த நாமாவளியில் போற்றப்படுபவள் ஶ்ரீ லலிதாம்பா. “லலிதா” என்னும் பெயருக்கு “விரும்பப்படுகிறவள்”, “ஸந்தோஷத்தைத் தருபவள்” என்று பொருள். அதனால் யாவரும் இந்த தேவியிடம் அவரவர்க்கு வேண்டிய நன்மைகளைத் தங்குதடையின்றி வேண்டிப் பெறலாம்.


